Google Pixel 9 பற்றிய விமர்சனம்

Google Pixel 9 Review

இம்முறை கூகிளின் Google Pixel 9 ஆனது வடிவமைப்பு, சிப்செட், திரை, கேமரா, மற்றும் மென்பொருள் போன்ற அணைத்து விடயங்களும் சிறப்பான மேம்பாடுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய Pixel 9 ஆனது 30% பிரகாச அதிகரிப்புடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் பெரிய 6.3" இன்ச் FHD+ OLED எனும் திரையை கொண்டுள்ளது.

மேலும் Pixel 9 இன் தோற்றத்தை குறிப்பிடுகையில், இரண்டு அடுக்கு கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பேனல்கள்,  தட்டையான அலுமினியம் பிரேம் சிறிய கேமரா மற்றும் பார்டர் உடன் IP68 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. மேலும் கூறப்போனால் இது ஐபோன்ககளை போன்ற வடிவமைப்பில் உள்ளது.

அனைத்து புதிய Pixel 9 போன்களிலும் உள்ள Google Tensor G4 சிப்பில் 8 அடுத்த தலைமுறை CPU கோர்கள் உள்ளன, வேகமான GPU, அதிக ஆற்றல் திறன் கொண்ட (மேம்பட்ட) மோடம் மற்றும் சாதனத்தில் AI பணிகளுக்குத் தேவையான அதிக RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. AI பற்றி பேசுகையில், கூகுள் ஜெமினி மூலம் கிடைக்கும் புதிய AI அம்சங்களின் மையத்தில் இருக்கும் டென்சர் ப்ராசசிங் யூனிட், டென்சர் G3 இன் உள்ளே இருப்பது போல்  உள்ளது.

அடுத்து கேமராக்களை ஒப்பிடும் போது ஏனைய Pixel 9 வரிசையில் உள்ள கேமராக்களை விட சற்று குறைவான தரத்தில் தான் காணப்படுகிறது எனலாம். பின்புறம் 50MP பிரதான கேமெரா, மற்றும் 48MP அல்ட்ரா வைட் கேமராவும், முன் பக்கத்தில் 10.5MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அடுத்த சிறப்பம்சமாக Pixel 9 இல் அல்ட்ரா சொனிக் கைரேகை ஸ்கேனர் காணப்படுவது ஒருவேகமான அனுவத்தை வழங்குவதுடன், சாட்டலைட் SOS உதவி முறையும் காணப்படுகிறது. இது கார்மின் மற்றும் ஸ்கைலோ எனும் நிறுவனங்களின் பங்குடைமையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் Pixel 9 இல் 27W அதிவேக சார்ஜ்ஜையும் அனுமதிக்கிறது. 

Pixel 9 ஆனது தற்போதைய அண்ட்ராயிடு 14 உடன் வருவதுடன் 7 ஆண்டுகளிற்கான முழு மென்பொருள் ஆதரவும் வழங்கப்படும். எனவே அடுத்து சில மாதங்களில் வெளியாக இருக்கும் அண்ட்ராயிடு 15 பற்றிய கவலை தேவையில்லை. மேலும் Pixel 9 அட்டைப்பெட்டியில் ஒரு USB - C வகை கேபிள் ஒன்றும் சிம் வெளியேற்றும் கருவியும் காணப்படும்.

மேலும் முழு விபரங்களுக்கு Google Pixel 9


Post a Comment

0 Comments