Motorola Moto G35 இன் விமர்சனம்

Motorola Moto G35 Review in Tamil


இந்த ஆண்டில் மோட்டோரோலா ஜி-சீரிஸில் புதிய   Moto G35 எனும் தொலைபேசியை மலிவான விலையில் சந்தைக்கு வெளியிட உள்ளது. இதனுடன் G55 எனும் தொலைபேசியும் வெளிவருகின்றது. ஆனால் பார்ப்பதற்கு இரண்டு சாதனங்களும் ஒரே மாதிரி காணப்பட்டாலும் செயல்திறனில் சற்று வேறுபாட்டை கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டு சாதனங்களும் மெல்லிய தோற்றத்திலும் பின்புற கேமரா மாத்திரம் சற்று உயர்ந்து காணப்படும்.  

மேலும் இதில் பச்சை நிறம் கொண்ட தொலைபேசியானது சோயா மற்றும் மூங்கில் உள்ளிட்ட மீள்சுழட்சி செய்யக்கூடிய சைவ தோலினால் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கொண்டவை பொலிகார்பனேற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

Moto G35 இல் 50MP பிரதான கேமராவும் 8MP அல்ட்ராவைட் லென்ஸுடன் மொத்தம் 2 கேமராக்கள் காணப்படுவதுடன். முன் பக்கத்தில் 16MP கேமராவையும் கொண்டுள்ளது. அத்துடன் 6.72இன்ச் LCD FHD + தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெப்ரெஸை கொண்ட டிஸ்பிலே காணப்படுகிறது. இதன் உச்ச பிரகாசம் 1,000 nits ஆகும்.

மேலும் Moto G35 இல் Unisco T760 சிப்செட்டும் 128GB அடிப்படை சேமிப்பகத்தையும் கொண்டுள்ளது. மேலும் இதில் அண்ட்ராயிட் 14 இயங்குதளத்துடன் மோட்டோரோலாவின் ஹலோ UI உடன் வருகின்றது.
மேலும் இதில் 18W சார்ஜிங் உடன் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. அத்துடன் Moto G35 வில் மைக்ரோ SD Card ஸ்லோட் , 3.5 mm ஹெட்போன் ஜாக் மற்றும் சார்ஜிங், டேட்டா பரிமாற்றத்திற்கான USB-C போர்ட் ஆகியவையும் காணப்படுகிறது. 

Post a Comment

0 Comments