மேலும் Realme எதனை இந்த பிரிவில் அதிவேக சிப்செட் ஆக கருதியதோ அந்த (MediaTek Dimensity 7300 Energy) மீடியா டேக் டிமென்சிடி 7300 எனும் சிப்செட்டை பயன்படுத்தி உள்ளத்துடன் இது டர்போ வேகத்தையும் வழங்குகிறது. அத்துடன் இந்த தொலைபேசி மோட்டார் விளையாட்டை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது மொபைல் விளையாட்டை முன்னுரிமை படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் பெட்டி வடிவிலான கேமரா அமைப்பு காணப்படுவதுடன் 3.5mm ஹெட் போன் ஜேக்கும் மற்றும் இந்த தொலைபேசி 7.6mm மெல்லியதாகவும் காணப்படுகிறது.
மேலும் இந்த Narzo 70 Turbo (6/128GB, 8/128GB, 8/256GB மற்றும் 12/256GB) எனும் விகிதத்தில் நினைவகத்தை வழங்குவதுடன், 50MP முதன்மை கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கும். அத்துடன் இந்த தொலைபேசி ஊதா, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் விற்பனைக்கு வரும்.
0 Comments