Honer Magic V3

ஹோனர் மேஜிக் V3 (Honor Magic V3) ஆனது இப்போது ஒரு சிறந்த மாற்றத்தை பெற்றுள்ளது. மேலும் இது உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன் தரம், அளவு, கேமரா மற்றும் தொழிநுட்பம் என பல விடயங்களில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை ஹோனர் நிறுவனம் வழங்கி உள்ளது. 

ஆம் கடந்த வருடம் ஹோனர் நிறுவனமானது தனது ஹோனர் மேஜிக் V2 வை வெளியிட்டு இருந்தது இதுவே மிகவும் மெல்லியதாக காணப்பட்டது. அனால் இம்முறை அதன் வரிசையில் வந்த Honor Magic V3 மேலும் சிறப்பான ஒரு சாதனமாக உருவாகியுள்ளது. இது போல்டபல் (Foldable) சாதனமாகும். இது டேப்லெட் வடிவத்தில் வைக்கும் போது 4.4 mm ஆக காணப்படுவதுடன், இதனை மடித்து பயன்படுத்தும் போது 9.3 mm ஆக இருக்கும். அத்துடன் இது வெறும் 226 கிராம் எடையை கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குறிய விடயமாக காணப்படுவதுடன் வயர்லெஸ் சார்ஜிங் முறையும் காணப்படுகிறது.

இந்த சாதனம் உருவாக்குவது ஒரு சவாலான விடயமாக இருந்ததாக ஹோனர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏன் என்றால் இதன் எடை குறைப்பும் பேனல்கள் மற்றும் தரம் போன்றவற்றினை உருவாக்குவது கடினம் என்பதால். மேலும் இந்த மேஜிக் V3 சாதனத்தின் உடையும் தரத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவையும் நிர்ணயித்துள்ளார்கள். அதன் மூலமாக இது IPX 8 எனும் தரத்தில் காணப்படுகின்றது.

மேலும் இதில் மூன்று பின்பக்க கேமராக்கள் காணப்படுகிறது. அதில் பிரதான கேமரா 50MP டெலி போட்டோ 50MP  மற்றும் அல்ட்ரா வைட் 40MP உள்ளது. ஸ்னாப்டிராகன் தலைமுறை 3 சிப்செட் பயன்படுத்தியுள்ளதுடன் 5150mAh பேட்டரியும்  காணப்படுகிறது.