Nothing Phone (2) இம்முறை சில விசேட அம்சங்களுடன்!

Nothing Phone (2)


Nothing Phone (2) நத்திங் தொலைபேசி 2 ஆனது இம்முறை சில விசேட அம்சங்களுடன் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக (Glymph) கிலிம்ப் எனப்படும் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிலிம்ப் எனப்படுவது தொலைபேசியின் சில முக்கிய செயற்பாடுகளிற்கு ஏற்ப பின்னால் காணப்படும் (LED Lights) ல் இ டி விளக்குகள் ஒளிரும். உதரணமாக நமது தொலைபேசியை சார்ச் செய்யும் போது தொலைபேசியின் பின்புறத்தில் காணப்படும் கீழ் உள்ள LED விளக்கு ஒளிரும். அதே போல் நோட்டிபிகேஷன், (Timer) டைமர்  மற்றும் இது போன்ற பல விடயங்களில் இந்த LED விளக்குகள் ஓளிரக்கூடியதாக உள்ளது ஓர் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

மேலும் இதில் Nothing இன் இயக்க முறைமை (OS) 2.0 பயன்படுத்தியுள்ளதுடன், இம் மென்பொருளானது பயன் படுத்துவதற்கு இலகுவாகவும் அதிவிசேடமான செயல்திறனை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த சிறப்பம்சமாக Apps மற்றும் (Widgets) விட்ஜெட்ஸ்களை, பயனர்களிற்கு பிடித்தவாறு வேண்டிய இடத்தில் இலகுவாக அணுகும் முறையில் வைக்க முடியும் எனவும் குறிப்பாக விட்ஜெட்ஸ்களை lock Screen இல் வைக்கவும் முடியும்.

மேலும் Nothing Phone (2) இல் Chat GPT உடன் இணைக்கப்பட்டுள்ளது இதனால் பயனர்கள் இதனை இலகுவாக அணுக முடியும் எனவும், குரல் மூலமான உரையாடளை மேற்கொள்ளவும் முடியும். ஆனால் குரல் மூலமான உரையாடலிற்கு Nothing இன் (Ear buds) இயர் பட்ஸ் பயன்படுத்தினால் மாத்திரமே குரல் அம்சத்தை பயன்படுத்த முடியும். 

அடுத்து கெமராவை எடுத்துக்கொண்டால் முன்பக்கத்தில் 32MP கொண்ட கெமராவும், பின்பக்கத்தில் 50MP பிரதான கெமராவும், மற்றும் 50MP யை கொண்ட அல்ட்ரா வைட் கெமராவும் காணப்படுகிறது. அத்துடன் அசையும் விடயங்களை துல்லியமாக படம் பிடிக்க AI தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில்(Snapdragon 8+ Gen 1 Chipset) ஸ்னாப்ட்ராகோன் 8+ தலைமுறை 1ஐ கொண்ட சிப்செட் மற்றும் 6.7 இன்ச் கொண்ட LPTO AMOLED எனும் 120Hz (Refresh Rate) ரெப்ரெஸ்  டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளதுடன்,  4700 mAh பேட்டரியும் காணப்படுகிறது. இதனை சார்ஜ் செய்ய 15W வயர்லெஸ் முறையும் 5W வயர் முறையும் காணப்படுகிறது.

மேலும் முழு Specification இற்கு

இந்த பதிவு தொடர்பான உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகிறது👇


Post a Comment

0 Comments